ETV Bharat / bharat

டெல்லி மௌலானாவை கைது செய்ய திட்டம்?

author img

By

Published : Apr 13, 2020, 12:14 PM IST

டெல்லி: டெல்லி மௌலானா சாத்-ஐ கைது செய்து விசாரிக்க மாநில காவலர்கள் முடிவெடுத்துள்ளனர்.

COVID-19 coronavirus Maulana Saad Crime branch delhi Tablighi jamaat Crime Branch to arrest Maulana Saad டெல்லி மௌலானா சாத்தை கைது செய்ய திட்டம் கரோனா பாதிப்பு, கோவிட்-19 வைரஸ், டெல்லி மௌலானா

டெல்லி மௌலானா சாத் விவகாரம் தொடர்பாக டெல்லி காவல் துறை குற்றப் பிரிவு மூத்த அலுவலர் ஒருவர் தெரிவிக்கையில், “மௌலானா சாத், காவலர்கள் கேள்வி கேட்பதைத் தவிர்க்கும் வகையில் சாக்குப்போக்குகளைத் தெரிவிக்கக்கூடும்.

மேலும் அவர் தனிமைப்படுத்துதலில் இருந்து தற்போதுதான் வந்துள்ளார். சமய மாநாடு நடந்த அமைப்பின் தற்போதைய நிலை குறித்தும் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகவே இது தொடர்பாக மருத்துவர்களின் ஆலோசனையை எதிர்நோக்கியுள்ளோம்” என்றார்.

மேலும், “சம்மந்தப்பட்ட மௌலானா முன்பிணை (ஜாமீன்) வேண்டி நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கலாம்” என்றும் தெரிவித்தார். மௌலானாவிடம் இதுவரை விசாரணை நடத்தாமல் காத்திருந்ததற்கு சுகாதார விதிகள் அமலில் இருந்ததே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அதிகம் தாக்கியது. இது தொடர்பாக அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை கண்டறியும் முயற்சியில் காவலர்கள் இறங்கியுள்ளனர்.

சம்மந்தப்பட்ட மாநாட்டில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கரோனாவுக்கு 308 நபர்கள் உயிரிழப்பு' - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.