- கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 31.8 விழுக்காடு குற்றங்கள் பதிவாகியிருந்த நிலையில், சென்ற ஆண்டு 33.2 விழுக்காடாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- இதில், 31.2 விழுக்காடு வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிலும், 94 விழுக்காடு வழக்குகளில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 18 வயதுக்குக் குறைவான குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளனர்.
- 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 4.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் 1.48 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில், சுமார் 46.6 விழுக்காடு கடத்தல் வழக்குகள். 35.3 விழுக்காடு வழக்குகள் பாலியல் குற்றங்களுடன் தொடர்புடையவை.
- 2019ஆம் ஆண்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதற்காக குழந்தைகள் கடத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுவது தொடர்பாக மொத்தம் 432 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் மொத்தம் 46,005 வழக்குகள் பெண் குழந்தைகள் குறித்தவை ஆகும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள்
மாநிலம் | குற்ற சம்பவங்கள் | சதவிகிதம் |
உத்தரப் பிரதேசம் | 7,444 | 6.9 |
மகாராஷ்டிரா | 6,402 | 15.1 |
மத்தியப் பிரதேசம் | 6,053 | 10.9 |
தமிழ்நாடு | 2,358 | 6.2 |
மேற்கு வங்கம் | 2,240 | 4.7 |
பதிவான வழக்குகள் மற்றும் நீதி
- கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி குழந்தைகளுக்கு எதிரான ஒரு லட்சத்து நான்காயிரத்து 788 பாலியல் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதேசமயம் 2019ஆம் ஆண்டில் 41 ஆயிரத்து 562 புதிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
- மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 350 வழக்குகளில், 66 வழக்குகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான்கு வழக்குகள் அரசு தரப்பால் வாபஸ் பெறப்பட்டுள்ளன. 525 வழக்குகள் விசாரணையின்றி கைவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 348 வழக்குகள் சமரசத்தை எட்டியுள்ளன.
- மேலும், பாலியல் தொழிலுக்காக குழந்தைகளை வாங்குவது குறித்த இரண்டாயிரத்து 598 வழக்குகள், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளன. 2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 842ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.