புதுச்சேரியில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம், புதுச்சேரி நகராட்சி சார்பில் அவர்களின் மேம்பாட்டிற்காக கடன் வசதி ஏற்பாடு செய்து தருவதாக, புதுச்சேரி தெருவோர வியாபாரிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
முதற்கட்டமாக 1,333 நபர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ், அடையாள அட்டை தயார் செய்யப்பட்டு பிரதம மந்திரி தெருவோர வியாபாரிகள் ஆத்ம நிதி என்ற திட்டத்தின் மூலம் தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது.
![Credit scheme for street vendors](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/07:59:38:1597415378_tn-pud-03-street-vendors-cm-function-7205842_14082020194936_1408f_1597414776_175.jpg)
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தெருவோர வியாபாரிகளுக்கு அதற்கான சான்றிதழ், அடையாள அட்டையை வழங்கினார்.