ETV Bharat / bharat

இடதுசாரிகளிடையே பிளவு: திரிணாமுல் கூட்டணி விவகாரத்தில் புதிய திருப்பம்!

author img

By

Published : Nov 20, 2020, 4:49 PM IST

கொல்கத்தா: இடதுசாரி கட்சிகளிடையே ஏற்பட்ட ஒற்றுமை, சமீபத்தில் முடிவடைந்த பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், சிபிஐ (எம்எல்), சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) ஆகிய கட்சிகள் 16 தொகுதிகளில் வெற்றிபெற உதவிய நிலையில், தற்போது மேற்கு வங்கத்தில் பாஜக அல்லது திரிணாமுல் காங்கிரஸ் இவர்களில் யார் முதன்மை எதிரி என்ற பிரச்னையில் இடதுசாரி கட்சிகளிடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகள் பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

இடதுசாரி
இடதுசாரி

ஆரம்ப காலகட்டத்தில் இந்த பிரச்னையில் சிபிஐ (எம்எல்) - சிபிஐ (எம்) இடையிலான மாற்றுக்கருத்து என்பது தத்துவார்த்த ரீதியாக இருந்தது. ஒருபுறம், சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, "மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸை தோற்கடிக்காமல் பாஜகவை எதிர்கொள்வது சாத்தியமில்லை" என்று கருத்து தெரிவித்தார். மறுபுறம், சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர், தீபங்கர் பட்டாச்சார்யா, “வங்காளத்தில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் பாஜகவே முக்கிய எதிரி” என்று கூறுகிறார்.

எவ்வாறாயினும், அந்த சிந்தாந்த பகை, மம்தா பானர்ஜி மற்றும் நரேந்திர மோடியை ஒப்பீடு செய்யும் சிபிஐ (எம்) தலைமையின் முயற்சியை இப்போது சிபிஐ (எம்எல்) பொலிட்பீரோ உறுப்பினர் கபிதா கிருஷ்ணன் வெளிப்படையாக விமரிசித்ததன் மூலம் ஒரு புதிய திருப்பத்தை தந்துள்ளது. சிபிஐ (எம்) மம்தாவையும் மோடியையும் பொய்யாக ஒப்பீடு செய்ய முயற்சிக்கிறது, மேலும் சிபிஐ (எம்)-ன் இந்த ஒப்பீடு யதார்த்தத்தை கொண்டிருக்கவில்லை. உண்மையில் திரிணாமுல் இன்று பாஜகவை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது என்று கிருஷ்ணன் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வங்காளத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு இடையில் ஒரு பொய்யான ஒப்பீட்டை ஏற்படுத்த முயற்சிக்கிறது. சிபிஐ (எம்) இன் “மோடிபாய் மற்றும் தீதிபாய்” சித்தாந்தம் யதார்த்தமாக இல்லை என்று அவர் கூறினார்.

பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் பிகாரில் இருப்பதைப் போலவே, பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸையும் ஒப்பிட்டு காட்ட சிபிஐ (எம்) முயற்சிக்கிறது. ஆனால் அது ஒரு புனைகதையை தவிர வேறு ஒன்றுமில்லை என்றும் கிருஷ்ணன் குற்றம் சாட்டினார். எனவே பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் ஒன்றுதான் என்ற சிபிஐ (எம்) முழக்கம் உண்மையில் யதார்த்தத்தை கொண்டிருக்கவில்லை. சிபிஐ (எம்)-ன் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே திரிணாமுல்லை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாக இருக்கும் என்று நம்புகிறார்கள் என்று கிருஷ்ணன் கூறினார்.

வகுப்புவாத பிரச்னையில் பாஜக மற்றும் திரிணாமுல் ஆகிய கட்சிகள் மீது குற்றம் சாட்டும் சிபிஐ (எம்)-ன் நிலைப்பாடு தவறானது என்றும் அவர் கூறினார். "சிபிஐ (எம்) ஒருபோதும் இந்துமத வகுப்புவாதத்தைப் பற்றி பேசுவதில்லை. அவர்களின் வாதம் என்னவென்றால், திரிணாமுல் கட்சி முஸ்லீம்களை திருப்திபடுத்தும் விதத்தில் நடவடிக்கை எடுக்கும்போது, பாஜக இந்து அடிப்படைவாதத்தை பரப்புகிறது என்பது தான். ஆனால் சிபிஐ (எம்) நிலைப்பாட்டின் மூலம் உண்மையில் பாஜக தான் ஆதாயம் பெறும், ”என்று கிருஷ்ணன் கூறினார்.

எனினும், இடது முன்னணி தலைவரும் சிபிஐ(எம்) பொலிட்பீரோ உறுப்பினருமான பிமன் போஸ், கிருஷ்ணனின் இந்த கூற்றுக்கு கடுமையாக பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை, பாஜக மற்றும் திரிணாமுல் இரண்டையும் "மக்களுக்கு சமமான ஆபத்தான எதிரிகள்" என்று மேற்கு வங்க இடது முன்னணி அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்தார்

தனது சொந்த கருத்தை வெளிப்படுத்த யாருக்கும் ஜனநாயக உரிமை உண்டு என்று, கிருஷ்ணனின் பெயரை குறிப்பிடாமல் பாசு கூறினார். "எனவே இதுபோன்ற அறிக்கைகள் இடதுசாரி முன்னணிக்கு அர்த்தமற்றவை. இதுபோன்ற அறிக்கைகளுக்கு நாங்கள் யாரும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றும் பாசு கூறினார்.

எவ்வாறாயினும், இந்த சிபிஐ (எம்) - சிபிஐ (எம்எல்) இடையிலான கருத்து வேறுபாடு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைமை எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கிறது. பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த திரிணாமுல் தலைவர், சில நாட்களுக்கு முன்பு வரை சிபிஐ (எம்) மற்றும் சிபிஐ (எம்எல்) ஆகியவை பிகாரில் நண்பர்கள் என்று கூறினார். திரிணாமுல் கட்சியை பற்றிய மென்மையான அணுகுமுறையின் பின்னணியில் சிபிஐ (எம்எல்) நிச்சயமாக ஒரு அரசியல் நோக்கத்தைக் கொண்டுள்ளது. திரிணாமுல்லுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஓரிரு இடங்களில் அவர்கள் வெற்றிபெற முடியும் என்பது காரணமாக இருக்கலாம். எந்தவொரு கூட்டணியிலும், சம்பந்தப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் சொந்த லாபங்களை கணக்கிடுகின்றன. எனவே சிபிஐ (எம்எல்) உடனான கூட்டணி எங்களுக்கு நன்மை பயக்குமா என்பதையும் நாங்கள் கணக்கிட வேண்டும் என்று அவர் கூறினார்.

திரிணாமுல் மக்களவை உறுப்பினர் சோகதா ராய்-ஐ தொடர்பு கொண்டபோது, ​​கூட்டணி வியூகங்களை முடிவு செய்து, அது குறித்து அறிக்கைகளை வழங்குவதற்கான இறுதி அதிகாரம் மம்தா பானர்ஜி மட்டுமே உண்டு என்று கூறினார். சிபிஐ (எம்) பற்றி சிபிஐ (எம்எல்)-ன் கருத்துக்களை பொறுத்தவரை, இது இரண்டு இடதுசாரி கட்சிகளின் உள் விஷயம், இது குறித்து எந்த கருத்தையும் எங்கள் தரப்பில் தெரிவிப்பது சரியாக இருக்காது என்று ராய் மேலும் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.