குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் சேஜன் ஷா. இவர் வெயிலின் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தன் கார் முழுவதும் மாட்டுச் சாணத்தை தடவி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ”மாட்டுச் சாணத்தை தடவியதால் கார் மட்டும் குளிர்ச்சியாக இல்லை. சுற்றுச் சூழலும் கட்டுக்குள் இருக்கிறது. கார் பயன்படுத்தும்போது அதில் இருந்து வெளிவரும் புகை பூமியின் வெப்பத்தையும் அதிகரிக்க செய்கிறது.
வீட்டில் இருக்கும் வெப்பத்தை தணிக்க சாணத்தை பயன்படுத்தியபோது ஏன் காரிலும் இதனை செயல்படுத்தக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. எனவே சாணத்தை காரிலும் தடவினேன்” என்றார்.