ETV Bharat / bharat

கரோனாவிலும் குறையாத குற்றம் - தனிமைப்படுத்தும் வார்டில் பாலியல் துன்புறுத்தல்

லக்னோ: கரோனா தொற்று தனிமைப்படுத்தும் வார்டில் மருத்துவர் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

covid patient molested in isolation ward noida

author img

By

Published : Jul 28, 2020, 1:11 PM IST

கரோனா தொற்று காரணமாக உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்படும் வார்டில் மற்றொரு நோயாளியான மருத்துவர், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றஞ்சாட்டியதாக கூடுதல் துணைக் காவல் கண்காணிப்பாளர் (ADSP) ரன்விஜய் சிங் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அதே வார்டில் மருத்துவர் ஒருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் வேறு மருத்துவமனையை சேர்ந்தவர். அந்த மருத்துவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார்" என்றார்.

"இதையடுத்து நாங்கள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளோம். இது குறித்தான நடவடிக்கையை விரைவில் மேற்கொள்வோம்" எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க...கரோனா முகாமில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.