ETV Bharat / bharat

கரோனா கற்றுக்கொடுக்கும் பாடங்கள்: மின்-கற்றலுக்கு தயாராகும் ஆசிரியர்கள்! - corona

மின்கற்றல் முறையில் ஆசிரியர்களின் பங்கு குறைவு என்பது கட்டுக்கதை. இன்னும் சொல்லப்போனால் ஆன்லைன் கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது.

E-Learning
E-Learning
author img

By

Published : Sep 17, 2020, 4:51 PM IST

கோவிட் 19 நோய்த்தொற்று காலத்தில் பல்வேறு துறைகளுடன் சேர்ந்து கல்வித் துறையும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் (87%) பத்துக்கு ஒன்பது மாணவர்கள் கல்வி கற்க முடியாமல் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக, யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக உலகம் முழுக்க 154 கோடி மாணவர்களது கல்வி, இந்த நோய்த்தொற்று காலத்தில் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது. கல்வி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் பெண்குழந்தைகள் தொடர்ந்து படிக்க இயலாத சூழலும் அதிகரித்துள்ளது, இதனால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் மட்டும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் சமூக சிக்கல்கள் தற்போதுள்ள சூழலில் அதிகரித்திருப்பதால், 32 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் கல்வி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும், ஆன்லைன் கல்வி முறை ஏராளமான மாணவர்கள் மற்றும் கல்வி நிலையங்களின் எதிர்காலத்தை காப்பாற்றியுள்ளது என்று தான் கூறவேண்டும். இந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்களின் படிப்பு வீணாவதைத் தடுத்து, ஆன்லைன் மூலம் தொடர்ந்து கல்வியை அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. பள்ளிகள் தொடங்கி பல்கலைக்கழகங்கள் வரை, அனைத்து நிலைகளிலும் உள்ள கல்வி நிலையங்கள் முழுமூச்சாக முன்வந்து சிபிஎஸ்இ, யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதல்களோடு, இந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை பயிற்றுவிக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் மற்றும் நம் அனைவரிடமும் ஆன்லைன் கல்வி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அதே வேளையில், இந்த கல்வி முறை அனைவருக்கும் சாத்தியமாகியிருக்கிறதா, திறம்பட பயிற்றுவிக்க முடிகிறதா என்ற கேள்வியும் விவாதமும் எழாமல் இல்லை.

கட்டுக்கதைகளும் உண்மையும்!

குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்டி, குறைந்த செலவினத்தில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கிடையில் உள்ள இடைவெளியைக் குறைத்து, கற்றலில் புதிய பரிமாணத்தை இந்த ஆன்லைன் கல்வி ஏற்படுத்தி வருகிறது. அதே நேரம் இதுகுறித்த கட்டுக்கதைகளும் தவறான தகவல்களும் பரவி வருகின்றன.

பொதுமுடக்கம் ஆரம்பக்கட்டத்தில் இருந்த போது ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்ட நேரத்தில், இந்த வகுப்பு முறை தற்காலிகமானது என்றும், விரைவில் இந்த முறை மாற்றப்படும் என்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் எண்ணினர். ஆனால், ஏற்கனவே மாபெரும் திறந்தநிலை ஆன்லைன் வகுப்புகள் திட்டத்தின் கீழ் ஸ்வயம் என்ற வடிவில், ஆன்லைன் வகுப்புகள் நம் நாட்டில் பரவலாக்கப்பட்டு விட்டன. இதன் மூலம் பள்ளிக் கல்வியில் தொடங்கி , தொழிற்கல்வி மையங்கள், இளங்கலை, முதுகலை, பொறியியல் மற்றும் நிபுணத்துவ கல்விக்கான மின் கற்றல் தளம் வழியாக அனைவரும் இலவசமாக கற்கக்கூடிய பாதை ஏற்கனவே வகுக்கப்பட்டு விட்டது. ஏராளமான பயிற்சி மையங்களும் மாணவர்களும் இந்த மின்கற்றல் தளத்திற்கு தயாராகி விட்டனர். இந்த கொரோனா காலத்தில், மின் கற்றலுடன் அதிக இடைவெளியைக் கொண்டிருந்த கல்வி மையங்களும் மாணவர்களும் கூட, அந்த இடைவெளியைத் தாண்டி ஆன்லைன் கல்வி தளத்திற்குள் நுழைந்துள்ளனர். ஆனாலும் தொழில்நுட்பங்களுக்கு அறிமுகம் அல்லாத ஆசிரியர்கள் இந்த ஆன்லைன் வகுப்புகள் மீது வெறுப்பு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வதில் வயது ஒரு தடையே அல்ல என்பதுதான் உண்மை. இதற்கு ஆர்வம் இருந்தால் போதும் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. தொழில்நுட்பங்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதோடு மட்டுமின்றி, ஏராளமான ஆசிரியர்களுக்கு புதிதாக பயமும் தொற்றிக்கொண்டுள்ளது. மாணவர்களையும் ஆசிரியர்களையும் மையப்படுத்தும் இந்த ஆன்லைன் கல்வியால், பாரம்பரிய முறைப்படி கல்வி புகட்டும் தங்களது வேலைவாய்ப்பு பறிக்கப்படுமா என்று அஞ்சுகின்றனர்! ஆயினும், மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தொழில்நுட்பப் பாதையில் பயணிக்கத் தயாராகும் கல்வி மையங்கள், ஆசிரியர்களுக்கு சிறப்பான வரவேற்பை மின் கற்றல் தளமானது அளிக்கிறது. இதற்கு, பழைய ’கரும்பலகை’ கற்பித்தல் முறையைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கான மனநிலையை அவர்கள் உருவாக்க வேண்டும்.

மின்கற்றல் முறையில் ஆசிரியர்களின் பங்கு குறைவு என்பது கட்டுக்கதை. இன்னும் சொல்லப்போனால் ஆன்லைன் கல்வி முறையில் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகமாக தேவைப்படுகிறது. பயிற்றுவித்தல் மட்டுமின்றி ஆன்லைன் பாடத்திட்டத்தை வடிவமைத்தல், உள்ளடக்கத்தை உருவாக்குதல், தொழில்நுட்பங்களின் உதவியால் மாணவர்களுக்கு அறிவைப் புகட்டுதல் ஆகிய பல்வேறு பணிகளுக்கு ஆசிரியர்களின் பங்கு முன்பை விட மிக அதிகம் என்பதை மறுக்க இயலாது.

சவால்களை தகர்த்தெறிதல்

தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு மின்கற்றல் முறைக்கு மாறுவதில் பல சவால்களும் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக பல்வேறு விதமான கல்வி நடைமுறைகள், மேலாண்மை அமைப்புகளைக் கொண்ட இந்திய கல்வி அமைப்பில் (5 லட்சம் பள்ளிகள், 50,000 உயர்கல்வி மையங்கள்), வெவ்வேறு பின்புலங்களைக் கொண்ட மாணவர்களுக்கு மின் கற்றல் தளத்தை முழுமையாக செயல்படுத்துவது சவாலான காரியம் தான்.

அனைவருக்கும் சமமாக ஆன்லைன் கல்வி கிடைக்க வகை செய்வது ஆட்சியாளர்களின் பொறுப்பு. புதிய கல்விக்கொள்கையில் மின் கற்றலுக்கான பங்களிப்பை அதிகரிப்பதுடன், அதற்கு தடையாக உள்ள கூறுகளை ஆய்வு செய்து அவற்றை அகற்றி தரமான மின்கற்றலை நடைமுறைப்படுத்த வேண்டும்.

மின் கற்றல் முறை ஒரு சாரார்க்கு சாத்தியாகியிருக்கும் அதே நேரம் நாட்டின் பெரும்பாலான மாணவர்கள் டிஜிட்டல் உலகத்தில் இன்னும் அடி எடுத்து வைக்கவில்லை என்பதால், அவர்களுக்கு இந்த மின் கற்றல் தளம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த கொரோனா காலத்தில் இதை அரசுகள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். மாணவர்களுக்கும், டிஜிட்டல் வழி கற்பித்தல் முறைக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பது தற்போது தான் கண்கூடாக தெரிய வந்துள்ளது. கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், ஆங்கில புலமை குறைந்த மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியைக் கொண்டு சென்று சமமான கற்பித்தல் முறைகளை ஏற்படுத்துவது சவாலான காரியம் தான். இந்த சூழலில் அனைவருக்கும் பொதுவான செயல்திட்டம், பொது நடைமுறைகளைக் கொண்டு வருவதைக் காட்டிலும், வெவ்வேறு விதமான அணுகுமுறை தேவைப்படுகிறது. அனைவருக்கும் பொதுவான கல்விக்கொள்கை என்பது டிஜிட்டல் விஷயத்தில் ஒத்துவராது. அரசுகள் முன்வந்து பல்கலைக்கழகங்கள், டிஜிட்டல் கல்வி மையங்களின் வசதிகளை மேம்படுத்தி, சைபர் மேம்பாடுகளுக்கு தகுந்த வகையில் மாற்றியமைக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் ஏற்ற வகையில், அவர்கள் எளிதில் தேர்வு செய்து கொள்ளும் விதத்தில் டிஜிட்டல் தளங்கள் அமைக்கப்பட வேண்டும்.

மாற்றத்தின் சக்தியாக ஆசிரியர்கள்

ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்ட நேரத்தில் ஆசிரியர்கள் சிறிய செல்ஃபோன் முன்னால் அமர்ந்து பாடங்கள் எடுப்பதில் அதிக சிரமங்களை மேற்கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் முன்னால் நின்று, அவர்கள் கண்களைப் பார்த்து, அவர்களது உடல் மொழிக்கு ஏற்றவாறு பாடங்கள் எடுக்கும் முறை இது வரை இருந்து வந்தது. வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் மாணவர்களுடன் உரையாடி அவர்களது சந்தேகங்களுக்கு நேரடியாக பதில் சொல்வதில் கைதேர்ந்த ஆசிரியர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் முதல் நெருக்கடிகள் ஏற்பட்டன. வகுப்பறைக்கு மாற்றாக சிறிய வீடியோவைப் பார்த்து பாடங்களை நடத்துவதில் அவர்கள் திணறியதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இன்றளவும் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் முழுமையான தொழில்நுட்ப புரிதலுடன் செயல்படுவது சந்தேகம் தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையை மாற்ற, மாணவர்களுக்கு முன்கூட்டியே பிபிடி கோப்புகள், கேள்வி பதில்கள் உள்பட பாடம் குறித்த கோப்புகளை அனுப்பி அவர்களை பயிற்சி எடுக்கச் சொல்லலாம்.

மின் கற்றல் முறையில் மாணவர்களை நெறிப்படுத்தி பாடங்கள் எடுப்பது சவாலான காரியம் தான். தொலைதூரத்தில் உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்களின் கற்றல் திறன் கூட குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதை சரிசெய்து மாணவர்களை கட்டுக்குள் வைத்திருப்பது மிக மிக்கியம். கடந்த மே மாதத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பாதுகாப்பான, ஆரோக்கியமான ஆன்லைன் பழக்கங்களுக்கான கையேட்டை சிபிஎஸ்இ கொண்டு வண்டுள்ளது. சைபர் பீஸ் கூட்டமைப்பின் உதவியுடன் இந்த கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கையேடு குறித்தும், டிஜிட்டல் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு, அரசுகளுக்கும், கல்வித் துறைகளுக்கும் உள்ளது.

லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் கல்வி கற்பதன் மூலம் ஆசிரியர்களும் மாணவர்களும் அதிகளவில் வேகமாக விஷயங்களை கிரகித்துக் கொள்ள முடியும். அத்துடன் புத்திசாலித்தனமாக செயல்படும் திறனையும் வளர்க்க முடியும். அதே நேரம், மாணவர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அவர்களது கற்கும் ஆர்வத்தை அதிகரித்து, டிஜிட்டல் தளத்தில் அவர்களை ஈடுபாடு காட்டச் செய்வது, ஆசிரியர்களின் அணுகுமுறை மற்றும் திறன்களைப் பொறுத்தது.

பாரம்பரிய முறையை விட்டு, புதுமையான முறையில் மாணவர்களுக்கு கல்வி புகட்டும் சூழலில் நாம் இருக்கிறோம். பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை, பாடங்களையும் கற்பித்தல் முறைகளையும் சுவாரஸியமாகவும், புதுமையாகவும் வடிவமைக்க வேண்டும். கல்வி ஆலோசகர்கள் மற்றும் தேசிய எலெக்ட்ரானிக்ஸ் & தகவல் தொழில்நுட்ப மையம், மத்திய கல்வி தொழில்நுட்ப மையம் ஆகிய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு மையங்களுடன் கல்வி நிறுவனங்கள் இணைந்து இதற்காக பணியாற்ற வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் நல்லதா கெட்டதா என்ற வாதத்தை கைவிட்டு, தற்போதுள்ள சூழலையும் எதிர்காலத்தையும் கல்வியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, அவர்களின் மனநிலைக்கு ஏற்ற வகையில் ஆன்லைன் கற்பித்தல் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.