நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில் ஒரு புறம் அதை தவிர்க்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக விளங்கும் காங்கர் கிராமத்தில் மக்கள் கரோனா முகக் கவசமாக சால் மர இலைகளை பயன்படுத்துகின்றனர்.
'தேசி ஜுகாத்' என அந்த முகக் கவசத்திற்கு பெயர் வைத்துள்ளனர். இக்கிராமத்து மக்கள் தங்கள் வீட்டில் இருந்தும் வெளியே வராமல் இருக்கின்றனர். இவர்கள் மற்ற கிராமங்களில் உள்ள மக்களுக்கு கை கழுவுதல், தனித்து இருப்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் வேலையிலிருந்து திரும்பி வருபவர்களும் மருத்துவமனைக்கு முதன்மை பரிசோதனைக்காக அனுப்பப்படுகிறார்கள். இதுபோன்று மர இலைகளின் மூலம் கிராம மக்கள் முகக் கவசம் செய்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க... இந்தோனேசிய உலமாக்கள் உள்பட 5 பேருக்கு கரோனா: சேலத்தில் அதிர்ச்சி