கோவிட்-19 தடுப்பூசி விநியோகம் தொடர்பான பணிகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோட்டெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.
இந்த தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் முக்கிய விவரத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்த தடுப்பூசி விநியோகம் தேர்தல் நடைமுறையைப் போல் பூத் வாரியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 719 மாவட்டங்களில் 57 ஆயிரம் பேர் பயிற்சி பெற்றுள்ளனர், என்றார்.
முன்னதாக, தலைநகர் டெல்லியில் இரு மாதிரி தடுப்பூசி மையங்களில் நேற்று (ஜனவரி 2) நடைபெற்ற சோதனை ஓட்டங்களை ஹர்ஷ்வர்த்தன் ஆய்வு செய்தார். மேலும் முதற்கட்டமாக 27 கோடி பேருக்கு ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்த அரசு திட்டம் உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா பாதிப்பு