டெல்லியில் இன்று ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான அறிக்கையில், பொது போக்குவரத்துச் சேவையான ரயில் சேவைகள் ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பிறகு வழக்கம்போல் இயக்கப்படும் என பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன. ரயில்கள் இயக்கப்படுவது குறித்து எவ்வித அறிவிப்பினையும் இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரை வெளியிடவில்லை. மக்களின் பாதுகாப்புக் கருதி பொது போக்குவரத்துகளின் தடைகள் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆலோசனைக் கூட்டத்தில் தற்போதுவரை, நாட்டில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: கரோனா சேவைகளுக்காக சிறப்பு ரயில் ’அர்ஜூன்’ அறிமுகம்