டெல்லி அம்பேத்கர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கரோனா சிறப்பு வார்டினை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், "2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது 200 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. தொற்றிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
நிலைமை மோசமான நிலைக்கு திரும்பினால், அதனை சமாளிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது.
புதிதாக படுக்கைகள் அமைக்கப்பட்டாலும், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்துவருகின்றோம்" என்றார்.