ETV Bharat / bharat

சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு! - மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

டெல்லி: கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பள்ளிகள் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க, புதிதாக தொடங்க, இணைப்பு விரிவாக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

COVID 19: Schools can apply for CBSE Affiliation till 30th June 2020
கோவிட்- 19: சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!
author img

By

Published : Apr 26, 2020, 3:14 PM IST

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகள் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வமான ஏற்பாடுகளும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல், முன்னதாக பெற்ற அங்கீகாரத்தைப் புதுப்பித்தல், புதிதாக தொடங்கவுள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கு அனுமதிப் பெறுதல், சிபிஎஸ்இ பள்ளியோடு வேறொரு பள்ளியை இணைத்து விரிவாக்கம் செய்வது போன்ற அனைத்துவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சிபிஎஸ்இ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதம்வரை அங்கீகாரம் பெற பள்ளிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுவந்தது.

இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் பெரும்பாலான பள்ளிகள் இவற்றை மேற்கொள்ளாமல் இருந்ததால் அப்பள்ளிகளுக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் மாா்ச் 31ஆம் தேதிவரை நீட்டிப்புசெய்யப்பட்டது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பீதி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கு அவகாசம் ஏப்ரல் 30ஆம் தேதிவரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 25ஆம் தேதி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது.

இதனையடுத்து, மத்திய அரசால் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை மேலும் நீட்டிக்கப்பட்டதால் இந்தக் கால அவகாசம் தற்போது ஜூன் 30ஆம் தேதிவரை மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

COVID 19: Schools can apply for CBSE Affiliation till 30th June 2020
கோவிட்- 19: சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற விண்ணப்பிக்க கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு!

இது தொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்துப் பள்ளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு உரிய ஆவணங்களுடன் பல்வேறு பிரிவுகளின் தாங்கள் சமர்ப்பிக்க வேண்டிய விண்ணப்பங்களை எந்தவொரு தாமதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் இந்த நீட்டிக்கப்பட்ட வசதியை இப்போதிலிருந்து பயன்படுத்தலாம். மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்க. http://cbse.nic.in/newsite/attach/AffiliationDateExtensionCircular.pdf” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாளொன்றுக்கு ஒரு லட்சம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு - சுகாதாரத் துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.