ETV Bharat / bharat

கோவிட் -19: புனே தனியார் மருத்துவமனைகள் இனி சிகிச்சை மையங்களாகும்!

மும்பை : கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள நெருக்கடி நிலையை கையாள்வது குறித்து புனே மாவட்ட நிர்வாகம் அனைத்து தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளது.

COVID-19: Pune officials hold meet with pvt hospitals for beds
கோவிட் -19: புனே தனியார் மருத்துவமனைகள் இனி சிகிச்சை மையங்களாகும்!
author img

By

Published : May 24, 2020, 4:00 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் இந்தியாவை ஆட்டம் காண செய்துள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தை பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளது. நாளுக்குநாள் இதன் பாதிப்பு எண்ணிக்கை அங்கே தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இதனிடையே, புனே கோவிட்-19 வைரஸால் 5,347 பேர் பாதிக்கப்பட்டும், 257 பேர் உயிரிழந்தும் உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

புனேவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் உயரும் என மஹாராஷ்டிரா அரசு அச்சப்படுகிறது. இதன் காரணமாக, அந்தப் பகுதியில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க அம்மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நேற்று (மே 23) புனேவில் உள்ள 60 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளுடன் அம்மாவட்ட ஆட்சியர் கிஷோர் ராம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிஷோர் ராம், “கோவிட்-19 கட்டுப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் அனைத்து விதமான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது உள்ள மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக இருக்கும் படுக்கை வசதிகள் போதாது என்பதால் பல இடங்களில் சிறப்பு பிரிவு ஆரம்பிக்கப்பட உள்ளது.

மாநில அரசின் இந்த முடிவால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதாரண படுக்கைகள், வென்டிலேட்டர்கள் கொண்ட 800 அவசர சிகிச்சை படுக்கைகள், ஆக்ஸிஜன் வசதிகள் கொண்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்தின் மருத்துவ நடவடிக்கைகளுக்கு கிடைக்கும்.

மஹாராஷ்டிராவில் உள்ள அரசு சாரா சுகாதார வழங்குநர்கள், மருத்துவர்கள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அளவில் நோயாளிகளை ஏற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

COVID-19: Pune officials hold meet with pvt hospitals for beds
கோவிட் -19: புனே தனியார் மருத்துவமனைகள் இனி சிகிச்சை மையங்களாகும்!

கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க தேவைப்பட்டால் விபத்திற்கு சிகிச்சையளிக்கும் அவசரப் பிரிவுகள், மகப்பேறு மருத்துவமனைகள் ஆகியவை கூட கையகப்படுத்தப்படலாம்” என கூறினார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தனியார் வசதிகளில் 80 விழுக்காடு படுக்கைகளை கட்டுப்படுத்த மஹாராஷ்டிரா அரசு உத்தரவு பிறப்பித்திருப்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க : டெல்லி சந்தையில் தக்காளி கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.