ஊரடங்கில் தளர்வுக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து சூரத்தில் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து, அப்பெண் எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவரின் பரிசோதனை முடிவில் கரோனா தொற்று உறுதியானதால் சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், திடீரென்று அப்பெண்ணுக்கு பிரசவ வலி வந்ததால் உடனடியாக மீண்டும் எம்.கே.சி.ஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பிரசவத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர். அதில், ஆண் குழந்தையின் எடை மிகவும் குறைவாக இருந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளது.
பெண் குழந்தையை சிறப்பு வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர். கரோனா பாதித்த பெண்ணும் உடனடியாக சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பெண் குழந்தைக்கு ஒரு வாரத்திற்குள் கரோனா பரிசோதனை நடத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் 5 சிறுமிகளைக் கைதுசெய்யக்கோரிய சிறுவன்: காவலர்கள் அதிர்ச்சி!