கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இதுவரை இந்தியாவில் 1200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 32 பேர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் வைரஸ் தொற்று உள்ளவர்களை அந்தந்த மாநில சுகாதரத் துறையினர் தனிமைப்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டிலிருந்து சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் சென்றார். அவர், வேறு மாநிலத்திலிருந்து வந்ததால், அம்மாநில சுகாதாரத் துறையிர் அவரது வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தினர். இதனையடுத்து இன்று அந்த நபர் தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து அம்மாவட்ட காவல் துறை உதவி கண்காணிப்பாளர் மனிஷா தாக்கூர் கூறுகையில், ’அவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று இல்லை என்றும், வேறு மாநிலத்திலிருந்து வந்ததால்தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு அவரது மனைவி மற்றும் மகனை இழந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் கூறினார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் 12,000 N95 போலி உயர் ரக முகக்கவசங்கள் பறிமுதல்