சாதாரண மக்கள் தொடங்கி அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் வரை, கரோனா பல்வேறு தரப்பினரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
அன்றைய நாளே கரோனாவால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேச அமைச்சர் கமலா ராணி உயிரிழந்தார். இருப்பினும், கரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என அனைவரும் பூரண குணமடைந்து வருகின்றனர்.
-
#COVID19 के लक्षण आने पर तुरंत टेस्ट कराएँ और उसके बाद इलाज कराएँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
मैं प्रदेशवासियों से अपील करता हूँ कि संक्रमण फैले ही न, हमें इस ओर ध्यान देना होगा।
मास्क लगाएँ, दो गज की दूरी रखें और हाथ साफ करते रहें, हम इससे बचे रहेंगे। #MPFightsCorona pic.twitter.com/w3PvOTMJS6
">#COVID19 के लक्षण आने पर तुरंत टेस्ट कराएँ और उसके बाद इलाज कराएँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 5, 2020
मैं प्रदेशवासियों से अपील करता हूँ कि संक्रमण फैले ही न, हमें इस ओर ध्यान देना होगा।
मास्क लगाएँ, दो गज की दूरी रखें और हाथ साफ करते रहें, हम इससे बचे रहेंगे। #MPFightsCorona pic.twitter.com/w3PvOTMJS6#COVID19 के लक्षण आने पर तुरंत टेस्ट कराएँ और उसके बाद इलाज कराएँ।
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 5, 2020
मैं प्रदेशवासियों से अपील करता हूँ कि संक्रमण फैले ही न, हमें इस ओर ध्यान देना होगा।
मास्क लगाएँ, दो गज की दूरी रखें और हाथ साफ करते रहें, हम इससे बचे रहेंगे। #MPFightsCorona pic.twitter.com/w3PvOTMJS6
அந்த வகையில், தற்போது மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கரோனாவிலிருந்து மீண்டுள்ளார். கடந்த ஜூலை 25ஆம் தேதி தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் பலனாக குணமடைந்து இன்று (ஆகஸ்ட் 5) அவர் வீடு திரும்பியுள்ளார்.
கரோனாவிலிருந்து மீண்டதால் மகிழ்ச்சியாக காணப்பட்ட அவர், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர் என அனைத்து மருத்துவப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கரோனாவை நினைத்து யாரும் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், அறிகுறிகள் தென்பட்டாலோ, காய்ச்சல் இருந்தாலோ மறைக்காமல் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ளுமாறு வலியுறுத்தினார்.
கரோனா ஏற்படுவது விதி என்று எண்ணி அப்படியே இருந்துவிடாமல், அதை எதிர்த்துப் போராடுங்கள் என்றும் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவில் கரோனா பரிசோதனை குறைவு