கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றும் நோக்கிலும், தேவையற்ற கூட்டம் சேருவதைத் தடுக்கும் வகையிலும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என அப்பிரிவு காவல் ஆணையர் தீபக் மஹைசேகர் தெரிவித்துள்ளார்.
டோக்கன் இல்லாதவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்த அவர், பூனேவில் இதுவரை கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஒன்பது மதுபானக் கடைகளின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் பல மாநிலங்களில் மதுபானக் கடைகளின் முன்பு மக்கள் கூட்டமாக கூடியதையடுத்து, அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: குடையுடன் வந்தால்தான் மது விற்கப்படும் - ஆட்சியர் அதிரடி