ETV Bharat / bharat

இந்தியாவில் 76 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு - இந்தியளவில் கரோனா பாதிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 44 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்தைத் தாண்டியது.

covid-19
covid-19
author img

By

Published : Oct 21, 2020, 2:05 PM IST

Updated : Oct 21, 2020, 2:43 PM IST

உலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த தகவல் பின்வருமாறு:

கரோனா வைரசால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 54 ஆயிரத்து 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 லட்சத்து 51 ஆயிரத்து 180 ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 717 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 1 லட்சத்து 15 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 61 ஆயிரத்து 775 பேர் மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67 லட்சத்து 95 ஆயிரத்து 103ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 7 லட்சத்து 40 ஆயிரம் 090 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன் மூலம் உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 88.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுவரை மொத்தம் 9 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நேற்று(ஆகஸ்ட்22) ஒரே நாளில் 10 லட்சத்து 83 ஆயிரத்து 608 மாதிரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கரோனா மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து ஆயிரத்து 365ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13 லட்சத்து 92 ஆயிரத்து 308 பேர் மீண்டுள்ளனர். 42 ஆயிரத்து 453 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் உள்ளது. இதுவரை 6 லட்சத்து 62 ஆயிரத்து 329 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 ஆயிரத்து 608 பேர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்து 3 ஆயிரத்து 964 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உலகிலேயே கரோனா நோய்த்தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக பிரேசில் இருக்கிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 4 கோடியே 10 லட்த்து 50 ஆயிரத்து 368 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3 கோடியே 06 லட்சத்து 32 ஆயிரத்து 287 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 29 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரோனா விதிமுறைகளை தளர்த்தும் ஹாங்காங்!

Last Updated : Oct 21, 2020, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.