சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915. இதில் நேற்று ஒரு நாளில் மட்டும் 37 ஆயிரத்து 724 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இவர்களில் ஏழு லட்சத்து 53 ஆயிரத்து 50 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 133 பேர் மருத்துவமனைகள், முகாம்கள், வீடுகளில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 732 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்திற்குள் 648 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 31 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 12 ஆயிரத்து 276 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 643 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக டெல்லியில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 96 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தகவல்படி, நாட்டில் மொத்தமாக ஒரு கோடியே 47 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 3 லட்சத்து 43 ஆயிரத்து 243 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது.