ETV Bharat / bharat

இந்தூரில் ஒரே நாளில் 184 பேருக்கு கரோனா உறுதி

author img

By

Published : Aug 26, 2020, 2:13 PM IST

போபால்:  இந்தூரில் ஒரே நாளில் 184 கரோனா தொற்று பதிவான நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11,860 ஆக அதிகரித்துள்ளது.

corona virus
corona virus

மத்தியப்பிரதேசம் மாநிலம், இந்தூரில் ஒரே நாளில் 184 பேருக்கு கரோனா தொற்று பதிவான நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 860ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 202 பேர் இன்று (ஆகஸ்ட் 26) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை, கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 290ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 3 ஆயிரத்து 199 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் கரோனா தொற்றால் இதுவரை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 371ஆக அதிகரித்துள்ளது. 6 ஆயிரத்து 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இந்தூர் நகரமானது, இந்தியாவின் முதல் கரோனா ஹாட் ஸ்பாட் பகுதியாகக் கண்டறியப்பட்ட பகுதியாகும். இங்கு மட்டும் மொத்தம் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 24 மணிநேரத்தில் ஆயிரத்து 151 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 24 லட்சத்து 67 ஆயிரத்து 759 பேர் கரோனாவால் குணமடைந்துள்ளனர். தற்போது கரோனாவுக்கு இந்தியாவில் 7 லட்சத்து 7 ஆயிரத்து 267 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் கரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3ஆவது இடத்திலிருந்து வருகிறது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.