ETV Bharat / bharat

நாட்டில் 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!

நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்துள்ளது.

India Covid 19 Covid 19 in India Corona cases in India Covid cases in India நாட்டில் 20 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு இந்தியாவில் கரோனா பாதிப்பு இந்தியாவில் கோவிட்-19 இந்தியாவில் கரோனா பாதிப்பாளர்கள்

author img

By

Published : Aug 7, 2020, 9:59 AM IST

Updated : Aug 7, 2020, 10:26 AM IST

ஹைதராபாத்: நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 25 ஆயிரத்து 409 ஆக உள்ளது. இதனால் உலக அளவில் கரோனா பாதிப்பாளர்களின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்துக்கு நெருங்கி வந்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களில் கரோனா பாதிப்பாளர்கள் பட்டியலில் ஒரு லட்சத்தை கடந்த ஆறு மாநிலங்கள் உள்ளன. அதில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு அதிகபட்சமான பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸிற்கு அதிகபட்சமாக நான்கு லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு 16 ஆயிரமாக பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக நான்கு ஆயிரத்து 461 உயிரிழப்புகள் மற்றும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பாதிப்பாளர்களுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

எனினும் சண்டிகர், தாத்ரா, நகர் ஹாவேலி, லடாக், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

இதற்கிடையில் மேற்கு வங்க மாநிலத்தில் புதிதாக இரண்டு ஆயிரத்து 954 கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இது அம்மாநிலத்தில் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும்.

மேற்கு வங்கத்தில் கரோனாவிற்கு 86 ஆயிரத்து 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 ஆயிரத்து 23 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர். 23 ஆயிரத்து 829 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழப்பு 1,902ஆக பதிவாகி உள்ளது.

இதையும் படிங்க: சானிடைசரை விட சோப்புதான் சிறந்ததாம்? ஏன் தெரியுமா?

Last Updated : Aug 7, 2020, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.