நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரசை கட்டுபடுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் லட்சத்தையும் தாண்டி கரோனா கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நான்கு லட்சம் கரோனா பாதிப்பை தாண்டி, நாட்டில் முதலிடம் வகிக்கிறது. அடுத்தபடியாக தமிழ்நாட்டில் இரண்டரை லட்சமாக கரோனா பாதிப்பு உள்ளது.
இதேபோல், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துவருகிறது. சுமார் 15 ஆயிரம் பேர் மகாராஷ்டிராவில் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழ்நாட்டில் நான்காயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (ஆகஸ்ட் 01) ஒரே நாளில், 54 ஆயிரத்து 736 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரத்து 724ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 364ஆக உள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 11 லட்சத்து 45 ஆயிரத்து 630ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:ரமணா பட பாணியில் பேரம்; கரோனா காலத்திலும் கல்லா கட்ட நினைக்கும் தனியார் மருத்துவமனைகள்!