நாட்டில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை நெருங்குகிறது. கடந்த ஏழு நாள்களாக ஒரு நாளைக்குச் சராசரியாக 9,500-க்கும் மேற்பட்டோர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 956 கடந்துள்ளது.
உயிரிழப்புகளின் எண்ணிக்கை நேற்று (ஜூன் 11) மட்டும் முதன்முறையாக 396-ஐ தாண்டியது. அதன் காரணமாக இந்தியா கரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. முன்னதாக, இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து ஒன்பது பேர் (நேற்றையை நிலவரப்படி) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் பிரிட்டன் நான்காவது இடத்தில் இருந்தது.
மூன்றாம் இடத்தில் ஐந்து லட்சத்து இரண்டாயிரத்து 436 பேர் பாதிப்புடன் ரஷ்யாவும், இரண்டாம் இடத்தில் எட்டு லட்சத்து ஐந்தாயிரத்து 649 பேர் பாதிப்புடன் பிரேசிலும், முதலிடத்தில் 20 லட்சத்து 89 ஆயிரத்து 701 பேர் பாதிப்புடன் அமெரிக்காவும் உள்ளன.
முதல் மூன்று நாடுகளைவிட இந்தியாவின் மக்கள் தொகை (உலகளவில் 2ஆவது இடம்) அதிகமுள்ள நிலையில் கரோனா தீநுண்மி பூதாகரமாக வளர்ந்துவருவது அச்சத்தை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க: இரண்டு ரூபாயில் கரோனாவுக்கு மருந்து: ஐ.சி.எம்.ஆருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு