ETV Bharat / bharat

பிளாஸ்மா தெரபியை கண்மூடித்தனமாக பயன்படுத்த வேண்டாம் - ஐசிஎம்ஆர் - ஐசிஎம்ஆர்

டெல்லி: கரோனா நோயாளிகளின் இறப்பைக் குறைக்காததால், கன்வெலசென்ட் பிளாஸ்மா தெரபியை (சிபிடி) அதிகளவில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா தெரபியை கண்மூடித்தனமாக பயன்படுத்த வேண்டாம்- ஐசிஎம்ஆர்

author img

By

Published : Nov 18, 2020, 10:56 PM IST

பிளாஸ்மா சிகிச்சையின் வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில், கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்கையினை கண்மூடித்தனமாக பயன்படுத்துவதிலிருந்து விலகுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஐசிஎம்ஆர் இந்தியாவில் 39 பொது, தனியார் மருத்துவமனைகளில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் இரண்டாம் கட்ட மல்டிசென்டர் சீரற்ற கட்டுப்பாட்டு சோதனையை கரோனா நோயாளிகளிடம் மேற்கொண்டது. பிளாசிட் என்பது சிபிடி பற்றிய உலகின் மிகப்பெரிய நடைமுறை சோதனை ஆகும். இதன்மூலம் கரோனா நோயாளிகளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று ஐசிஎம்ஆர தெரிவித்துள்ளது.

சீனாவிலும் நெதர்லாந்திலும் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வுகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கரோனா நோயாளிகளின் மருத்துவ விளைவுகளை மேம்படுத்துவதில் சிபிடியின் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஆவணப்படுத்தவில்லை என்றும் ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது. எனவே சிபிடியை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது நல்லதல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா நன்கொடையாளர் 18-65 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். கரோனா தொற்று அறிகுறி தெரிந்த 14 நாள்களுக்கு பிறகு பிளாஸ்மாவை தானம் செய்யலாம். சிபிடி, ஐசிஎம்ஆர் என்டிஎஃப் அறிவுறுத்தியபடி, குறிப்பிட்ட அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்படும்போது கரோனா தொற்றை நிர்வகிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்"

டெல்லியில் கரோனா நிலைமை குறித்து மதிப்பிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கரோனா நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை, பிளாஸ்மா நிர்வாகத்திற்கான SOP-ஐ வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அக்டோபர் 20ஆம் தேதி, ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் பால்ராம் பார்கவா, “கரோனா தொடர்பான தேசிய சிகிச்சை வழிகாட்டுதல்களிலிருந்து பிளாஸ்மா சிகிச்சையை நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.