ETV Bharat / bharat

'இந்தியாவில் கரோனா பரிசோதனை குறைவு'- சௌமியா சுவாமிநாதன் தகவல் - உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கோவிட்-19 பரிசோதனைகள் குறைந்த அளவில் நடைபெறுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

COVID19 testing WHO scientist Soumya Swaminthan Bharat Biotech Krishna Ella Central Drugs Standard Control Organisation Covaxin இந்தியாவில் கரோனா பரிசோதனை குறைவு சௌமியா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனம் பொதுமுடக்கம்

author img

By

Published : Aug 5, 2020, 8:30 AM IST

ஹைதராபாத்: உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர். சௌமியா சுவாமிநாதன், “கரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமுடக்கம் (lockdown) தற்காலிக நடவடிக்கை என்றும் கூறினார்.

மேலும், கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்த முயற்சிக்கும் சில நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த அளவிலேயே சோதனை நடைபெறுகிறது என்ற விகிதத்தையும் அவர் எடுத்துரைத்தார். வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் கலந்துகொண்ட டாக்டர். சௌமியா சுவாமிநாதன் இது குறித்து மேலும் கூறுகையில், “கோவிட்-19 எதிரான தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் உள்ளது. இதில் 28 பேர் முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

ஐந்து பேர் இரண்டாம் கட்ட சோதனைக்கு செல்கின்றனர். உலகம் முழுக்க 150க்கு மேற்பட்டவர்கள் பரிசோதனைகளில் கலந்துகொண்டுள்ளனர். ஜெர்மனி, தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் போது, இந்தியாவில் சோதனை விகிதங்கள் மிகக் குறைவாக உள்ளன. அமெரிக்கா கூட ஏராளமான மக்களைச் சோதித்து வருகிறது. எனவே நாம் சோதனையை அதிகரிக்க வேண்டும்.

போதுமான எண்ணிக்கையிலான சோதனைகள் இல்லாமல், வைரஸை எதிர்த்துப் போராடுவது "நெருப்பை கண்ணை மூடிக்கொண்டு போராடுவது" போன்றது. மேலும், மாவட்ட மருத்துவமனைகளில் கிடைக்கும் படுக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள், அவசர சிகிச்சை பிரிவுகள் (ஐ.சி.யு) மற்றும் ஆக்ஸிஜன் விநியோகங்களை அரசாங்கங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதற்கு சமூக பரவலே காரணம். பொதுமுடக்கம் ஒரு தற்காலிக நடவடிக்கை என்பதை நாங்கள் அறிவோம், ஏனெனில் இது மக்கள் ஒன்றிணைவதைத் தடுக்கிறது. மேலும் பொதுமுடக்கம், வைரஸை சமாளிக்க போதுமான அவகாசத்தை அரசுக்கு வழங்கியது.

கோவிட்-19 தடுப்பூசி தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் விகிதம் 70 சதவீதமாக இருந்தால், அது ஒரு நல்ல ஒன்றாக கருதப்படுகிறது. அடுத்த ஆண்டுகள் 200 கோடி (2 பில்லியன்) தடுப்பூசிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

இந்த வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில், கோவாக்சினை தடுப்பூசிகளை உருவாக்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா, “விரைவான ஒப்புதல்களுக்கு மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) போன்ற சில ஒழுங்குபடுத்தும் அலுவலர்களை மத்திய அரசு பரவலாக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் தெலங்கானா தகவல் தொடர்பு (ஐ.டி) மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் கே.டி.ராமராவும் கலந்துகொண்டார்.

இதையும் படிங்க: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கிய கோவாக்சின் மருத்து பரிசோதனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.