நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் (ஜன. 07) இன்றுவரை கரோனா தொற்று 1.03 கோடியை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 ஆயிரத்து 346 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 222 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் கரோனா
ஒருநாளில் 20,346 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தொற்றால் இதுவரை ஒரு கோடியே மூன்று லட்சத்து 95 ஆயிரத்து 278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, இரண்டு லட்சத்து 28 ஆயிரத்து 83 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர். அவை மொத்த தொற்று எண்ணிக்கையில் 2.19 விழுக்காடாக உள்ளது.
கரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ச்சியாக 17ஆவது நாளாக மூன்று லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 859 ஆக உயர்ந்து, குணமடைந்தோர் விகிதம் 96.36 விழுக்காடாக உள்ளது, அதே நேரத்தில் கோவிட்-19 இறப்பு விகிதம் 1.45 விழுக்காடாக உள்ளது.
கோவிட்-19 பரிசோதனை நிலவரம்
ஜனவரி 6ஆம் தேதிவரை 17 கோடியே 84 லட்சத்து 995 கோவிட்-19 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது. இதில் நேற்று மட்டும் ஒன்பது லட்சத்து 37 ஆயிரத்து 590 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.
கரோனா பரவல்
நாட்டின் கோவிட்-19 எண்ணிக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16 ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது.
இது செப்டம்பர் 28 அன்று 60 லட்சம், அக்டோபர் 11 அன்று 70 லட்சம், அக்டோபர் 29 அன்று 80 லட்சம், நவம்பர் 20 அன்று 90 லட்சம், டிசம்பர் 19 அன்று ஒரு கோடியைக் கடந்துள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 நெருக்கடியின்போது கிராமப்புறப் பொருளாதாரம்தான் நாட்டை தாங்கிப்பிடித்தது - ஓம் பிர்லா