ETV Bharat / bharat

இந்தியாவிலேயே கரோனாவுக்கான செயற்கை சுவாசக் கருவிகள்: ராஜேஷ் பெருமிதம்

author img

By

Published : Aug 5, 2020, 2:34 PM IST

எந்த நாட்டின் கையையும் எதிர்பார்க்காமல், உள்நாட்டிலேயே கரோனா நோயாளிகளுக்கு தேவையான செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அதுமட்டுமில்லாமல் மிகுதியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்து நிற்பதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷன்

டெல்லி: யாரையும் எதிர்பார்க்காமல் இந்தியா தன்னிச்சையாக செயற்கை சுவாசக் கருவிகள் தயாரிப்பில் முனைப்புக் காட்டி வருவதாக மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மிகுதியாக பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா உயர்ந்து நிற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் இந்திய செயற்கை சுவாசக் கருவிகள் சந்தையில் 444.74 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்களை இறக்குமதி செய்திருந்தது.

ஆனால் தற்போது கரோனா காலம் என்பதால், உலகளவில் செயற்கை சுவாசக் கருவிகளின் தேவை அதிகரித்தது. இச்சூழலில் இந்தியா தன் உள்நாட்டு படைப்புகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.

கோவிட்-19: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை சுவாசக் கருவிகள் ஏற்றுமதி!

"வெற்றிகரமான மருத்துவ சரிபார்ப்பிற்குப் பிறகு மற்றும் டிஜிஹெச்எஸ் குறிப்பிட்ட பரிந்துரைகளின் அடிப்படையில், வென்டிலேட்டர் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது". இவ்வாறு பூஷன் கூறினார்.

10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரையிலான வெளிநாட்டு செயற்கை சுவாசக் கருவிகளை ஒப்பிடும்போது, ஒரு பொருளுக்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை போட்டி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.