ETV Bharat / state

"அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும்" - திமுக அமைச்சர் ரகுபதி காட்டம்! - ragupathy criticized aiadmk

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும்; இருக்கின்ற வாக்கை தக்க வைத்தால் போதும் என்று தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரகுபதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அமைச்சர் ரகுபதி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை (Credits - ETV Bharat Tamil Nadu)

புதுக்கோட்டை : நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே உள்ள காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”காந்தி மண்டபம் முறையாக பராமரிக்கப்படவில்லை என ஆளுநர் கூறும் குற்றச்சாட்டு தவறானது. ராத்திரியில் நடைபெறும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. நாங்கள் காந்தி மண்டபம் உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் தினந்தோறும் மாநகராட்சி சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருடர்கள் சுவர் ஏறி குதித்து இரவில் திருடினால் அதற்கு நாங்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்.

இதையும் படிங்க : அதிமுக வாக்குகள் சரிய இதுதான் காரணமாம் - ஈபிஎஸ் சொல்வதை கேளுங்க!

எடப்பாடி பழனிசாமி மீது செல்ஃபோன் வீசப்பட்டதா, விழுந்ததா என்று அவர்களே இன்னும் உறுதியான முடிவை சொல்லவில்லை. அவர் புகார் வந்தால் அது குறித்து அவர்கள் சொன்னால் பார்க்கலாம். அதிமுக ஐடி-விங் கூட்டம் எந்தவிதப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. அதிமுகவின் வாக்கு இன்னும் குறையத்தான் செய்யும் இருக்கின்ற வாக்கை அவர்கள் தக்க வைத்தால் போதும்.

பாஜகவை கடுமையாக எதிர்த்ததால் மனோ தங்கராஜ் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது என்பது தவறானது. அதேபோல, ஆளுநரிடம் மோதல் போக்கு இருந்தால் அவரின் பதவி மாற்றம் செய்யப்பட்டது என்பதும் தவறானது. சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை ஆளுநருக்காக நான் புறக்கணிக்கவில்லை. நான் புறக்கணிப்பதாக இருந்தால் கடந்த ஆண்டு புறக்கணித்திருப்பேன். எனக்கு வேறு பணிகள் இருந்ததால் நான் இந்த ஆண்டு அதில் கலந்து கொள்ள இயலவில்லை" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.