ETV Bharat / bharat

'கரோனா நோயாளிகள் ஓட, ஒளிய முடியாது'- வந்துவிட்டது புதிய செயலி - கரோனா வைரஸ் பாதிப்பு குஜராத்

அகமதாபாத்: கரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் வகையில் செயலி ஒன்றை குஜராத் அரசு அறிமுகப்படுத்தியது.

COVID-19  GIS-based app  Jayanti Ravi  Gujarat government  Gujarat police  'கரோனா நோயாளிகள் ஓட, ஒளிய முடியாது'- வந்துவிட்டது புதிய செயலி  கரோனா தனிமைப்படுத்துதல் அறியும் செயலி  கரோனா பாதிப்பு  கரோனா வைரஸ் பாதிப்பு குஜராத்  COVID-19: Guj launches app to track home-quarantined persons

author img

By

Published : Mar 28, 2020, 12:27 AM IST

குஜராத் அரசாங்கம் புதிய செயலி (ஆப்) ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க முடியும்.

இது குறித்து அரசு சுகாதார முதன்மைச் செயலாளர் ஜெயந்தி ரவி தெரிவிக்கையில், “அகமதாபாத், காந்திநகர், வதோதரா மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களில் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) அடிப்படையிலான பயன்பாடு தொடங்கப்பட்டுள்ளது.

சூரத் மாநகராட்சி ஏற்கனவே நகரத்தில் 3,600 வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்க இந்த செயலியை பயன்படுத்துகிறது. ஜிஐஎஸ் மேப்பிங் தவிர, ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து நபர் நகர்ந்தால் அதிகாரிகளை எச்சரிக்க இந்த பயன்பாட்டில் 'ஜியோ ஃபென்சிங்' பொருத்தப்பட்டுள்ளது. வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள சுமார் 20 ஆயிரம் நபர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இது உதவும்" என்றார்.

குஜராத் காவல்துறையில் இதுவரை 298 பேர் மீது வீட்டு தனிமைப்படுத்தலை மீறியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மதுக்கடைகள் மூடப்பட்டதால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.