ETV Bharat / bharat

கோவிட்-19: ஆன்டிபாடிகளை உருவாக்குவதில் அறிவியல் முன்னேற்றம்

ஹைதராபாத்: கோவிட்-19 பெருந்தொற்று உலகை உலுக்கி வரும் இச்சூழலில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

Hyderabad COVID-19 Coronavirus outbreak Coronavirus scare antibody tests global pandemic கோவிட்-19 ஆன்டிபாடிகளை உருவாக்குவதில் அறிவியல் முன்னேற்றம் ஆன்டிபாடிகள், அறிவியல் முன்னேற்றம், கரோனா பாதிப்பு

author img

By

Published : Apr 14, 2020, 8:36 PM IST

உலகெங்கிலும் புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயிக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் உடலில் புகுந்து சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தி மூச்சை நிறுத்துகிறது.

இந்த கடுமையான சுவாசப் பிரச்னையை எதிர்கொள்ளும் வகையில் நோயெதிர்ப்பு சக்தியை (ஆன்டிபாடிகள்) அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இதில் மருந்துகள் கண்டறியும் நிறுவனங்ள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இந்த ஆன்டிபாடி சோதனைகளை ஆர்டர் செய்ய முனைகின்றன. ஐரோப்பாவில் உள்ள ஜெர்மன் நிறுவனமான யூரோஇம்முன் (Euroimmun), அவர்களின் சோதனையை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் விற்க அனுமதிக்கும் சான்றிதழைப் சமீபத்தில் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஆன்டிபாடி சோதனை தயாரிப்பு மேலாளரான கான்ஸ்டான்ஸ் ஸ்டிபா கூறுகையில்,"ஆன்டிபாடி கண்டறிதல் தொடர்பாக, குறிப்பாக மருத்துவ பணியாளர்கள் எல்லோரும் இப்போதே பைத்தியம் பிடித்தவர்கள் போல் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே வைரஸ் இருந்ததா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார்.
நோய் காரணமாக சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறை ஏற்படுவதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைப்புகளுக்கு மேலும் அழுத்தம் ஏற்படுகிறது.

பொதுவாக ஒரு சுகாதாரப் பணியாளருக்கு கோவிட்-19 பாதிப்பு இருந்தாலும், அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக இருந்தால், அவர்கள் தொற்றுநோய்க்கு அஞ்சாமல் வேலைக்குத் திரும்புவார்கள்.

அந்த வகையில் ஆன்டிபாடி சோதனை பல்நோக்கு ஆராய்ச்சி முறைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ பரிசோதனைகளின் போது தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா என்பதை இது சரிபார்க்க முடியும்.

மக்கள் தொகையில் எத்தனை பேருக்கு கோவிட்-19 அறிகுறிகள் உள்ளன என்பதை பொது கொள்கை வகுப்பாளர்களுக்கு தெரிவிக்க உதவுவதே அதன் மிக முக்கியமான தற்போதைய பயன்பாடு ஆகும்.
தற்போதைய வைரஸ் ஆர்.என்.ஏவைக் கண்டறியும் பி.சி.ஆர் சோதனைகள், கோவிட் -19 நோய்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.
இருப்பினும், உலகளாவிய விநியோக சவால்கள் உள்ளன.

அத்துடன் தனிப்பட்ட இயந்திரங்களின் செயல்திறனை உறுதிப்படுத்த தேவையான நேர்மறையான கட்டுப்பாடுகள் உள்ளன.

இவைகளுக்கு மத்தியில் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த ஆன்டிபாடிகள் கண்டறியும் சோதனைகள் தொடர்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.