நாட்டில் கரோனா (கோவிட்-19) வைரஸ் பாதிப்பு குறித்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவர தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
நாட்டில் நான்காயிரத்து 67 பேர் கரோனா (கோவிட்19) பாதிப்பு உள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு 109 பேர் உயிரிழந்துள்ளனர். 291 பேர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டிலேயே அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் கரோனாவுக்கு 45 பேரும், குஜராத்தில் 11 பேரும், மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது பேரும், தெலங்கானா மற்றும் டெல்லியில் தலா ஏழு பேரும், தமிழ்நாடு, பஞ்சாபில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் உயிரிழப்பு நான்கு ஆக உள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் தலா மூன்று பேரும், ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளத்தில் தலா இருவரும், பிகார், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கரோனா பாதிப்பு மாநிலங்கள் வாரியாக
எண் | மாநிலங்கள் | கோவிட்-19 பாதிப்பு |
01 | மகாராஷ்டிரா | 690 |
02 | தமிழ்நாடு | 571 |
03 | டெல்லி | 503 |
04 | தெலங்கானா | 321 |
05 | கேரளா | 314 |
06 | ராஜஸ்தான் | 253 |
07 | உத்தரப் பிரதேசம் | 227 |
08 | ஆந்திரா | 226 |
09 | மத்தியப் பிரதேசம் | 165 |
10 | கர்நாடகா | 151 |
11 | குஜராத் | 122 |
12 | ஜம்மு காஷ்மீர் | 106 |
13 | ஹரியானா | 84 |
14 | மேற்கு வங்காளம் | 80 |
15 | பஞ்சாப் | 68 |
16 | பிகார் | 30 |
17 | அசாம் | 26 |
18 | உத்ரகாண்ட் | 26 |
19 | ஒடிசா | 21 |
20 | சண்டிகர் | 18 |
21 | லடாக் | 14 |
22 | இமாச்சலப் பிரதேசம் | 13 |
23 | அந்தமான் தீவுகள் | 10 |
24 | சத்தீஸ்கர் | 09 |
25 | கோவா | 07 |
26 | புதுச்சேரி | 05 |
27 | ஜார்க்கண்ட் | 03 |
28 | மணிப்பூர் | 03 |
29 | மிசோரம் | 01 |
30 | அருணாச்சலப் பிரதேசம் | 01 |
இந்தத் தகவல்கள் மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.