ETV Bharat / bharat

டெல்லியில் குறையும் கரோனா உயிரிழப்பு - டெல்லியில் குறையும் கரோனா உயிரிழப்பு

டெல்லியில் கரோனா உயிரிழப்பு 44 விழுக்காடு குறைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
author img

By

Published : Jul 27, 2020, 5:51 PM IST

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இதுவரை 14 லட்சம் பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 49,931 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 708 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக 32,771 உயிரிழப்பு சம்பவங்கள் நிகழந்துள்ளன.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஜூன் மாதம் டெல்லியில் கரோனா உயிரிழப்பு 44 விழுக்காடு குறைந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெருந்தொற்று ஆரம்ப காலத்திலிருந்தே இது முக்கிய நோக்கமாக இருந்துள்ளது. இதனால் திருப்தி அடைய மாட்டோம். உயிரிழப்பு விகிதத்தை பூஜ்யமாக குறைக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

  • "Delhi flattens the death curve, Covid deaths down 44% in June"

    Personally, this has been my most important mission from the beginning of the pandemic.

    We will not get complacent even now, this figure needs to come down to ZERO. pic.twitter.com/i4mfB7DBBq

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) July 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 1,30,606ஆக உள்ளது. இதுவரை, 3,827 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'கரோனாவை அழிக்க வேண்டும்' - விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெங்களூரு தானோஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.