புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்த லாக்டவுன் வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் வரை தொடர்கிறது. இந்தியாவில் லாக்டவுன் (ஊரடங்கு) அடுத்த மாதம் (மே) 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டில் தங்குவதன் பக்க விளைவு என்னவென்றால், வீடு மற்றும் குடும்ப வன்முறைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. 2016ஆம் ஆண்டில் சிறுவர் பாலியல் வன்கொடுமைகள் 40 விழுக்காடு வரை அதிகரித்துள்ளன.
சிறுவர்- சிறுமியரை உடல் ரீதியிலாக பெரும்பாலும் பெற்றோரே துன்புறுத்துகின்றனர். ஆகவே இதுபோன்ற நேரங்களில் வீட்டு வன்முறையுடன் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்தலின் போது துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்து தப்பிக்க முடியாது.
பிரேசிலில் இருந்து ஜெர்மனி, இத்தாலி, சீனா வரை துணைக் கண்டம் செயற்பாட்டாளர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள் தாங்கள் ஏற்கனவே துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகரித்த அச்சுறுத்தல் கரோனா வைரஸ் ஊரடங்கின்போது கணிக்கக்கூடிய பக்க விளைவு என்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்த துஷ்பிரயோகம் என்பது அவசரநிலைகளில், மோதல், பொருளாதார நெருக்கடியின் போது மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. இதற்கிடையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் குறிப்பாக கடுமையான சவாலாக உள்ளன.
இது அனைத்து நெருக்கடி சூழ்நிலைகளிலும் நிகழ்கிறது என்று பெண்கள் நல ஆர்வலர் மார்சி ஹெர்ஷ் கூறினார். மேலும் நாங்கள் கவலைப்படுவது வன்முறை விகிதங்கள் அதிகரித்து வருவது போலவே, இந்த சேவைகளை அணுகுவதற்கான பெண்களின் திறன் குறையும். இது ஒரு உண்மையான சவால் என்றார்.
பல நாடுகளில், தனிமைப்படுத்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகரித்த ஆபத்தை பிரதிபலிக்கும் வகையில் சட்டம் உள்ளது. ஏன் கொள்கை மாற்றங்களுக்கான அழைப்புகளும் வந்துள்ளன. இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்த வழக்குகள் அதிகரித்து வருவதால் வீட்டு வன்முறை தொடர்பாக புகாரளிக்க உதவி எண்களை (ஹெல்ப்லைன்) காவலர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். பணியிடத்தில், இனி யாரும் இல்லாததால் துன்புறுத்தல் மற்றும் திருட்டுகள் குறையும்.
ஆனால் தொலைதூர வேலை என்பது சக ஊழியர்களிடையே ஆன்லைன் துன்புறுத்தலை அதிகரிக்கக்கூடும். ஏனென்றால் அதிகமான ஆன்லைன் உபயோகம் உள்ளது. எனினும் ஆன்லைனிலும் குற்றத்தில் ஈடுபட்டால் தடுக்க சட்ட நடவடிக்கைகள் உள்ளது.
இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட பொது பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் ஆகியவற்றில் சமூக விரோத நடத்தைகள் குறைந்துள்ளன. எனினும் ஊரடங்கு பல எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
தீங்கிழைக்கும் கரோனா வைரஸால் தற்போது இருமல் கூட ஒரு குற்றமாகும். பொதுமக்கள், காவல்துறை மற்றும் மருத்துவ ஊழியர்களை குறிவைத்து மக்கள் தாக்குவதாக செய்திகள் வேறு வந்துள்ளன. உலகெங்கிலும் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அபாயங்களை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில் வல்லுநர்கள் சமூகத்தின் பிணைப்புகளை, ஆறு அடி தூரத்தில் இருந்து பராமரிப்பது (சமூக இடைவெளி) நெருக்கடியில் இருப்பவர்களுக்கு இன்றியமையாதது என்று கூறுகிறார்கள்.
உலகெங்கிலும் கரோனா வைரஸ் பரவல் நகர்வதால், கடுமையான குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், வீட்டு வன்முறை மற்றும் ஆன்லைன் மோசடி போன்ற குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த நெருக்கடி நேரத்தில் அரசாங்கங்களும் அமைப்புகளும் தொடர்ந்து போராடுகின்றன. இந்நேரத்தில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப விழிப்புணர்வு என்னும் கல்வி அவசியம். அந்த விழிப்புணர்வை நண்பர்களுக்கும் அயலவர்களுக்கும் கொடுப்போம்.
இதையும் படிங்க: கோவிட்-19: அமெரிக்காவில் விஷம் போல் பரவ என்ன காரணம்?