உலகளவில் கோரத் தாண்டவத்தை ஆடிவரும் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு, இந்தியாவில் இதுவரை நான்காயிரம் பேரைத் தாண்டிவிட்டது. இதில் கவலைக்குரியக் காரணம் என்னவென்றால், மார்ச் மாதத்தின் மத்தியில் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாஅத் (டி.ஜே) மதக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில், 30 விழுக்காடு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் நிஜாமுதீனில் வருடாந்திர மதச்சபையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினர். அந்த உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளனர். நாட்டின் பெரும்பகுதிகளில் டி.ஜே., கூட்டத்துடன் தொடர்புடைய பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், அசாம், கர்நாடகா, அந்தமான் மற்றும் நிக்கோபார், உத்தரகண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கேரளா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.
இந்தநிலையில், தப்லிக் ஜமாஅத் உறுப்பினர்கள் தங்களின் பயண வரலாற்றைத் தெரிவிக்கத் தயக்கம் காட்டுவதால், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று, சுகாதார அலுவலகர்கள் அஞ்சுகின்றனர். அதேபோல் நிஜாமுதீன் சமூகத் தொடர்பு விவரங்களையும் தேடுகின்றனர்.
இதன் காரணமாக, நாட்டில் கோபமும், திகைப்பும் ஏற்பட்டுள்ளது. பக்கச் சார்பான தொலைக்காட்சி, சமூக ஊடக அறிக்கைகள் தப்லிக் எதிர்ப்பு உணர்வின் ஒரு முறைக்கு வழிவகுத்தன. இது, இந்து - இஸ்லாம் விரோத நிலையை ஏற்படுத்தியது. இந்த இரு துருவ அரசியல் மீதான பார்வை மீண்டும் எழுந்துள்ளது.
தற்போது, கோவிட்-19 நோய்க்கு நாட்டில் ஒரு மத டி.என்.ஏ., இருக்கிறது என, சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதற்குப் பின்னால், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., இருப்பதாக பரஸ்பர குற்றச்சாட்டு எழுகிறது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய பா.ஜ.க., தேசியத் தலைவர் ஜே.பி., நட்டா, கட்சித் தலைவர்கள் கோவிட்-19 வைரஸுக்கு வகுப்புவாத நிறத்தைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார். தேசத்தை வழிநடத்துவதில் இருக்கும் பொறுப்பையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தப்லிக் ஜமாஅத் தலைமை, உறுப்பினர்களுக்கு எதிராகவும், எரிச்சல் ஊட்டும் கருத்துகளைக் வெளியிடக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாட்டில் அதிகரித்த நிலையில், இப்பிரச்னை மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இதை யாரும் வகுப்புவாத பிரச்சினையாக மாற்றக்கூடாது. ஏனெனில் வைரஸுக்கு எதிரானப் போராட்டத்தில் நாம் ஒன்றுபட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்துகக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து, இதுபோன்ற போலியானச் செய்திகள் இணையத்தில் குவிந்து கிடக்கின்றன.
இதற்கு செய்திகள் தாராளமாக பரப்பப்படுவதே காரணம். இந்த வெறுப்பு பேச்சுகள் மாறியிருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஜே.பி., நட்டாவின் பேச்சு வரவேற்கத்தக்கது. பாஜக உறுப்பினர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அதிக விசுவாசமுள்ளவர்கள் கோவிட்-19 நோய், மத உணர்வு தொடர்பாக ஆத்திரமூட்டும் கருத்துக்களைத் தவிர்ப்பதற்கான ஆலோசனைக்கு கவனம் செலுத்துவார்கள்.
நாட்டில் பில்லியனுக்கும் அதிகமான மக்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்திவருகின்றனர். இதற்கிடையில், ஊடகங்கள் , சமூக ஊடக பயனர்கள் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு எதிராக, சில மாநிலங்கள் உறுதியான உத்தரவுகளைப் பிறப்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தச் சூழலில், போலி வீடியோக்களைப் பரப்புவது தொடர்பாக, மகாராஷ்டிராவின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே விடுத்த ‘கடுமையான எச்சரிக்கையைப்’ பாராட்ட வேண்டும். ஏனெனில், அவர் தனது உத்தரவில் பொய்யான செய்திகளைச் பரப்பினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார்.
டெல்லி தப்லிக் ஜமாஅத் மாநாட்டில் பங்கேற்று டெல்லி திரும்பிய பங்கேற்பாளர்கள் 100 விழுக்காடு அடையாளம் காணப்பட்டு மகாராஷ்டிராவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் போலவே இனவெறுப்பை தூண்டும் அபாயகரமான வைரஸ் ஒன்று உருவாகிவருகிறது.
ஆகவே வேடிக்கையாகக்கூட பொய்யான செய்திகள், தவறானத் தகவல்களை பரப்பாதீர்கள். 21 நாட்கள் பூட்டுதலுக்குப் (லாக் டவுன்) பிறகு நாடு படிப்படியாக இயல்பான நிலைக்குத் திரும்பவேண்டும். கோவிட்-19 நோய் குறித்த நாட்டின் பரந்த மக்கள் தொகையில் பிளவுக்கு வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நிராகரிக்கப்பட வேண்டும்.
கட்டுரையாளர் டெல்லியைச் சேர்ந்த சமூக கொள்கைப் படிப்பு இயக்குனர் சி. உதய பாஸ்கர்!