ETV Bharat / bharat

மத்திய அரசால் பிரிக்கப்பட்ட சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள்!

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதியோடு முடியவுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

covid-19-centre-lists-red-green-zone-districts-for-week-after-may-3

author img

By

Published : May 1, 2020, 7:00 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு இன்னும் இரு நாள்களில் முடியவுள்ள நிலையில், மாநில சுகாதாரத்துறைச் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளர் ப்ரீத்தி சுடான், வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதியோடு முடியவுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலமாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களின் இந்த வகைப்பாட்டை மாநிலங்கள் மே 3 ஆம் தேதி முதல் ஒரு வாரம் வரை பின்பற்ற வேண்டும் எனவும்; இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் போது, ​​கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு, அதற்கு முன்னர் திருத்தப்பட்டு மேலும் சில பின்தொடர்தல் நடவடிக்கைகள் மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் மத்திய அரசின் சார்பில் கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வகைப்பாட்டில் மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, பெங்களூரு, அகமதாபாத் போன்ற பெருநகரங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்தந்த மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 'கரோனா வைரஸ் பாதிப்பைப் பொறுத்து முன்னதாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய மண்டலங்களாக மாவட்டங்களைப் பிரித்திருந்தோம். சில பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மீட்கப்பட்ட நோயாளிகளின் விழுக்காடு உயர்ந்துள்ளது. அந்த மாவட்டங்கள் வேறு மண்டலங்களில் பிரித்து சேர்க்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அந்த மண்டலங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கடைசி 21 நாள்களில் எவ்வித கரோனா தொற்று பாதிப்பும் இல்லையென்றால், அந்த மாவட்டங்கள் பச்சை மண்டலங்களில் சேர்க்கப்படும். இதேபோல் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், கரோனா வைரஸ் பாதிப்பு குறையும் போது பச்சை மண்டலத்தில் சேர்க்கப்படும்.

12 முக்கியத் தலைநகரங்களும் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியைப் பொறுத்தவரை 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 14 மாவட்டங்கள் சிவப்பிலும், 16 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், ஆறு மாவட்டங்கள் பச்சையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

குஜராத்தைப் பொறுத்தவரையில் ஒன்பது மாவட்டங்கள் சிவப்பிலும், 19 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், ஐந்து மாவட்டங்கள் பச்சையிலும் இருக்கின்றன.

மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஒன்பது மாவட்டங்கள் சிவப்பிலும், 19 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், 24 மாவட்டங்கள் பச்சையிலும் இருக்கின்றன. அதேபோல் ராஜஸ்தானில் எட்டு மாவட்டங்கள் சிவப்பிலும், 19 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், 6 மாவட்டங்கள் பச்சையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆந்திர பிரதேசத்தைப் பொறுத்தவரையில் ஐந்து மாவட்டங்கள் சிவப்பிலும், ஏழு மாவட்டங்கள் ஆரஞ்சிலும், ஒரு மாவட்டம் பச்சையிலும் உள்ளன. மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரையில் 10 மாவட்டங்கள் சிவப்பிலும், 5 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், 8 மாவட்டங்கள் பச்சையிலும் இணைந்துள்ளன.

அசாம், ஹிமாச்சலப் பிரதேசம், லடாக், மேகாலயா, புதுச்சேரி, திரிபுரா ஆகியப் பகுதிகளில் சிவப்பு மண்டலங்கள் எதுவும் இல்லை.

உத்தர பிரதேசத்தைப் பொறுத்தவரை 19 மாவட்டங்கள் சிவப்பிலும், 36 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், 20 மாவட்டங்கள் பச்சையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 12 மாவட்டங்கள் சிவப்பிலும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், ஒரு மாவட்டம் பச்சையிலும் உள்ளன. தெலங்கானாவைப் பொறுத்தவரையில் 6 மாவட்டங்கள் சிவப்பிலும், 18 மாவட்டங்கள் ஆரஞ்சிலும், 9 மாவட்டங்கள் பச்சையிலும் உள்ளன.

கோவா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், நாகலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்கள் பச்சை மண்டலங்களில் உள்ளன.

இந்த மாவட்டங்கள் அனைத்தும் மாநிலத்திற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் கொடுத்த அறிக்கையின் படியே பிரிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ஊரடங்கிலிருந்து எவ்வித தளர்வுகளும் இருக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நகராட்சி அலுவலர்கள், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும். அப்போது கரோனா வைரஸ் மீண்டும் பரவுவதைத் தடுக்க முடியும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல் திட்டங்களை உருவாக்கி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். மாவட்டத்தின் தொடக்கம், முடிவு ஆகிய இடங்களில் எவ்வித தளர்வுகளும் இருக்கக் கூடாது. அவசர கால தேவை, அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளக் கூடாது. சிறப்பு மருத்துவக் குழுக்களை உருவாக்கி, ஒவ்வொரு வீடுகளிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற சோதனையை மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.