இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டாலும், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அவர்களில் 67 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் டெல்லி ஜாமியா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட 32 பேருக்கும், திரிபுராவில் 10 பேருக்கும், கொல்கத்தாவில் ஒருவருக்கும் என கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நொய்டாவில் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்!