ETV Bharat / bharat

சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு

author img

By

Published : Feb 24, 2020, 11:26 PM IST

டெல்லி: சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், சசி தரூரின் மனுவுக்கு பதிலளிக்கும்படி டெல்லி காவல்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sunanda Pushkar  Sunanda Twitter account  Shashi Tharoor  Delhi court  Sunanda Pushkar case  சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூர் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு  சுனந்தா புஷ்கர், சசிதரூர், வழக்கு, தற்கொலை, மர்மமரணம்  டெல்லி காவல்துறை  Court seeks Delhi Police reply on Tharoor's plea in Sunanda Pushkar case
Court seeks Delhi Police reply on Tharoor's plea in Sunanda Pushkar case

காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவை தொகுதி உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்த புஷ்கர் 2014ஆம் ஆண்டு சந்தேகமான முறையில் உயிரிழந்தார். சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியதாக, சசிதரூர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில் சசிதரூர், சுனந்தாவின் ட்வீட்டர் கணக்கை பாதுகாக்கக்கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக டெல்லி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சுனந்தா புஷ்கர் மரணத்துக்கு முன்னதாக சில ட்வீட்களை பதிவிட்டிருந்ததாகவும், அந்த ட்வீட்கள் அவரின் மன அழுத்தத்தின் வெளிபாடு என்றும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கு மார்ச் 20ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சசிதரூர் மீது டெல்லி காவல்துறையினரால் 498-ஏ (ஒரு பெண்ணின் கணவர் அல்லது உறவினரின் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார்), இந்திய தண்டனைச் சட்டத்தின் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.