ஆந்திராவின் முதலமைச்சராக 2004 முதல் 2009 ஆம் ஆண்டுவரை ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இருந்தபோது, அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டி அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தன் நிறுவனத்திற்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவருக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
பின்னர், 2012 மே 27ஆம் தேதி அவரை சிபிஐ கைது செய்தது16 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இது தொடர்பாக, ஜெகன் மோகன் ரெட்டி மீது, 11 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. பின்னர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு, இந்த வழக்குகள் விசாரணையில், நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி, ஜெகன் மோகன் பல முறை மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஜனவரி 10ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை சிபிஐ நீதிமன்றம் ஜனவரி 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 31ஆம் தேதி ஜெகன் மோகன் ரெட்டியை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க:
'வீட்டைக் காணோம்' வடிவேலு பாணியில் கலெக்டரிடம் புகாரளித்த கூலித் தொழிலாளி!