ETV Bharat / bharat

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம்!

பிரசாந்த் பூஷண் வழக்கு
பிரசாந்த் பூஷண் வழக்கு
author img

By

Published : Aug 31, 2020, 12:18 PM IST

Updated : Aug 31, 2020, 1:51 PM IST

08:59 August 31

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டரில், முகக் கவசம், ஹெல்மெட் அணியாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என விமர்சித்து பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  

அதனால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷணை குற்றவாளி என அறிவித்து, அவர் மன்னிப்பு கேட்க கால அவகாசம் அளித்தது.  

ஆனால், அவர் மன்னிப்பு கோரமுடியாது என மறுப்பு தெரிவித்தார். அதனால் உச்ச நீதிமன்றம் அவரின் தண்டணை விவரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வழங்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தது. அதன்படி, இன்று (ஆகஸ்ட் 31) பிரசாந்த் பூஷணுக்கு 1 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அபராதம் செலுத்த தவறினால் மூன்று மாதம் சிறை எனவும், மூன்றாண்டுகள் வழக்கறிஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய சட்ட மாணவர்கள்

Last Updated : Aug 31, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.