கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் 2018ஆம் ஆண்டு பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் பாதிரியார் ஃபிராங்கோ முல்லக்கல் கைதுசெய்யப்பட்டார்.
இவர் மீதான பாலியல் வழக்கு, கோட்டயம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது. இதையடுத்து அவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தார் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அங்கு ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டதாகவும், அதனால் நீதிமன்றத்தில் ஆஜாராக முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் அறிவித்தார். அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கு வழங்கப்பட்டிருந்த பிணையை ஜூலை 1ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிரியார் முல்லக்கல் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கன்னியாஸ்திரி வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய பிராங்கோ மனு நிராகரிப்பு!