புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்தனர். அப்போது, ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசிக்கு பதிலாக, அனைவருக்கும் வங்கியில் பணம் செலுத்தப்படும் என்று கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கடந்த 17 மாதங்களாக இலவச அரிசிக்கு பதிலாக பணம் செலுத்தாமல் ரூ. 9 கோடி அளவில் ஊழல் செய்திருப்பதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாமிநாதன், கிரண் பேடியிடம் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை பட்டியலிட்டார். மேலும், இவர்கள் அளித்த மனுவை விசாரித்த ஆளுநர் கிரண் பேடி, இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை செயலருக்கு உத்தரவிட்டுள்ளார்.