இந்தியாவிலேயே அதிக பக்தர்கள் வழிபடும் கோயிலாகவும் வருமானம் அதிகம் பெறும் கோயிலாகவும் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி கோயில் திகழ்கிறது. இங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். லட்டுக்குப் பிரசித்திப் பெற்ற இக்கோயிலின் நிர்வாகம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், சீனாவில் தோன்றி உலகமெங்கிலும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலால் பொது இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம், காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் இருக்கும் பக்தர்கள் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்று பரவாமலிருக்க இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கோயிலின் அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி அடிக்கப்படும் எனவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொரோனா அச்சுறுத்தல்: ஹோலி கொண்டாட்டங்களை தவிர்க்க கெஜ்ரிவால் முடிவு