ETV Bharat / bharat

கரோனாவால் கோடிக் கணக்கில் நஷ்டம்: மேற்கு ரயில்வே அறிவிப்பு - மேற்கு ரயில்வே கோடிகணக்கில் நஷ்டம்

மும்பை: கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கிட்டத்தட்ட 180 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Railways
Railways
author img

By

Published : Mar 30, 2020, 8:23 PM IST

கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி மக்கள் ஊரடங்கு பின்பற்றப்பட்டது. இதன் அடுத்தக் கட்டமாக, 21 நாள்கள் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி, மே 23ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து, அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனால், ரயிவ்துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

இது குறித்து மேற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், "மார்ச் 22ஆம் தேதிக்கு முன்பு 78.50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மார்ச் 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 100 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. மும்பையில் மட்டும் 9 லட்சம் பயணிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்துள்ளனர். அவர்களுக்கு 62.11 கோடி ரூபாய் திருப்பி தரப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே துறை மட்டுமல்லாமல் பல துறைகள் ஊரடங்கால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், இது தொடர்ந்தால், பெரும் பொருளாதார சிக்கலை நாடு சந்திக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை - மத்திய அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.