மகாராஷ்டிரா மாநிலம், புல்தானமா மாவட்டத்தைச் சேர்ந்த 71 வயது முதியவர் ஒருவர் தனக்கு கோவிட்-19 (கரோனா) அறிகுறி இருப்பதாகக்கூறி, சமீபத்தில் அம்மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்தார். அவரது ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்தச் சூழலில், நேற்று அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில், அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை எனத் தெரியந்துள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "உயிரிழந்த முதியவருக்கு ஏற்கனவே சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பிய அவர், புல்தானா பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் நாக்பூருக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இதில் அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது" என்றார்.
மகாராஷ்டிராவில் இதுவரை 32 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 107 பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஒரே காலாண்டில் யெஸ் வங்கிக்கு ரூ.18,564 கோடி கடன்!