சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதனால் உலகம் முழுவதும் இதுவரை சுமார் மூன்று லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பெருந்தொற்றைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்விதமாக வெளிநாடுகளிலிருந்து, இந்தியா வரும் பயணிகளை விமான நிலைய அலுவலகர்கள் பரிசோதித்துவருகின்றனர். அந்த வகையில் நேற்று வெளிநாட்டிலிருந்து, மும்பை வந்த 306 பயணிகளை அலுவலகர்கள் பரிசோதித்தனர்.
அதேபோல் மும்பை நகரத்தைச் சேர்ந்த 811 பேருக்கு கரோனா கண்டறிதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 138 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பதற்கான அறிகுறி தோன்றியதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் வைத்து கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
மேலும் கரோனா பரவாமல் இருக்க சுத்தமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதை மீறி பொது இடங்களில் எச்சில் துப்பிய 115 பேரிடம் அரசு 1.15 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது.
இதையும் படிங்க: நாடு முழுவதும் தொடங்கியது 'மக்கள் ஊரடங்கு'