கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அறிகுறிகளை ஆராய்ந்த பின்பே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார். கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. கரோனா தொற்று பற்றிய புதிய தகவல்கள் பின்வருமாறு.
நாசி செல்களினால் கரோனா வைரஸ் துகள்கள் அதிகமாக ஈர்க்கப்படும். ஆரம்பத்தில் மூக்கு துளைகளுக்குள் இந்த வைரஸ் தங்கிவிடும். அப்போது, பாதிக்கப்பட்டவரின் நுகர் உணர்வு சிதைந்துவிடும். அதன்பிறகு நாசிக் குழி வழியாக வைரஸ் தொண்டையை அடையும். பின்னர் புரதத்தின் உதவியோடு வைரஸ் வளரத் தொடங்கும். இந்த சூழலில் பாதிக்கப்பட்ட நபருக்கு எந்த அறிகுறியும் தெரியாது. ஆனால் அவர் மூலமாக பிறருக்கு வைரஸ் பரவிக் கொண்டிருக்கும்.
வைரஸ் உள்ளே நுழையும்போது நம் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை எதிர்க்கவில்லையெனில், அது நம் நுரையீரலில் வழியாக நழுவிச் செல்லும். பின்னர் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, சுவாசிக்க சிரமப்படுவோம். இந்த நிலைக்கு நிமோனிடிஸ் என்று பெயர். சுவாச உறுப்பின் சதைகள் வீக்கமடைந்து நுரையீரலில் நீர் கோர்க்கத் தொடங்கும். இதனால் பாதிக்கப்பட்டவர் மோசமான சுவாசக் கோளாறுகளை சந்திக்க நேரும். ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு ஆபத்தான நிலைக்கு சென்றுவிடும். இந்த சூழலில் பாதிக்கப்பட்டவருக்கு வெண்டிலேட்டர் உதவி அவசியம் தேவைப்படும்.
வெண்டிலேட்டர் மூலம் பாதிக்கப்பட்டவர் சுவாசிக்கும் வேளையில், நோய் எதிர்ப்பு அமைப்பு வைரசுக்கு எதிராக போராடும் வரை காத்திருக்க வேண்டும். இந்த நிலையில், அதிகமாக எதிர்வினை ஆற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு செல்களை தாக்கும். அப்போது உடல் முழுவதும் வீக்கம் ஏற்படும், இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்தக் குழாய்களில் எரிச்சல் ஏற்படும். பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு சிறுநீரகம் செயலிழந்துவிடும். உயிரணு செயலூக்கிகளால் இதயக் கோளாறு ஏற்படும். இப்படி பல்வேறு உறுப்புகளும் செயலிழப்பதால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது.
கரோனா வைரசால் இதயம் மற்றும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் தாக்கம் குறித்து இன்னும் ஆராய வேண்டும். ரத்த குழாய்களில் நிகழும் வைரஸ் தாக்குதலால், இதயத்தின் செயல்பாடு நின்றுவிடுகிறது. வூகானில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 416 நோயாளிகளை ஆய்வு செய்ததில், அதில் 20 சதவீதம் பேர் உயிரிழந்ததற்குக் காரணம் இதய பாதிப்பு என இருதயவியல் இதழ் ஜமா தெரிவிக்கிறது.
சர்க்கரை நோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்களை கரோனா தாக்குவது மிகவும் ஆபத்தானது. வைரசின் தாக்கம் அதிகமாகவுள்ள நபருக்கு கல்லீரல் நொதிகள் மிகவும் குறைந்து காணப்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கல்லீரலிலும் கரோனா வைரஸின் தாக்கம் இருக்கும் என்பது இதன்மூலம் தெரியவருகிறது.
கரோனா வைரசால் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கருதுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வலிப்பு, தலைவலி ஆகியவை பொதுவான அறிகுறிகளாக இருக்கிறது.
நோயாளிகள் குழப்பமான நிலையில் இருப்பதை மருத்துவர்கள் கண்காணித்துள்ளனர். இதன்மூலம் மூளையில் பாதிப்பு இருக்கும் என கருதுகின்றனர். வைரஸ் நேரடியாக மூளையை பாதிக்கிறதா அல்லது உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைவதால் இந்த மாற்றமா என உறுதியாக தெரியவில்லை என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டன்கன் எங் தெரிவிக்கிறார். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நிகழும் மாற்றங்கள் கவனமாக கண்காணிக்கப்படுகின்றன, விரைவில் தெளிவான முடிவு கிடைக்கும் என அஜய் ஷா தெரிவித்தார்.