ETV Bharat / bharat

கட்டட தொழிலாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கக்கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - CONSTRUCTION WORKERS

மதுரை: கட்டட தொழிலாளர்கள் அனைவருக்கும் ஐந்தாயிரம் ரூபாய் கரோனா நிவாரண நிதியாக வழங்க உத்திரவிட கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Jul 15, 2020, 1:46 AM IST

தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொன்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் கட்டடத் தொழிலாளர்கள் இந்த கரோனா தொற்று காலத்தில் வேலையின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

கோரிக்கையின் அடிப்படையில் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் ரூபாய் 1000 நலத்திட்ட திட்டத்தை முதலமைச்சர் அறிவித்தார். ஆனால் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்ட புதுபிக்கபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மட்டும் ஆயிரம் வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இவர்களது வாழ்க்கை வேலையின்றி கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ரூ.1000 என்ற தொகை போதுமானதாக இருக்காது. எனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்.

கட்டடத் தொழிலாளர்கள் பெரும்பாலும் அதிக கல்வியறிவு இல்லாதவர்களாக இருப்பதால் இவர்கள் தங்களது பதிவினை புதுப்பிக்காமல் உள்ளனர் .இவர்கள் ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு புலம்பெயர்ந்துதான் தொழிலை பார்த்துவந்தனர். இதனாலும் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்களது பதிவை புதுப்பிக்காமல் விட்டுவிட்டனர். அவ்வாறு புதுப்பிக்காமல் உள்ள தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

டெல்லி அரசு கட்டட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் என இரு முறை நிவாரண நிதியாக வழங்கி உள்ளது. பஞ்சாப் அரசு ரூ.3 ஆயிரம் நிவாரண நிதியாக இரு முறை வழங்கி உள்ளது. அதேபோல் உத்தரப் பிரதேச அரசும் தலா ரூ.1000 என மூன்று மாதத்திற்கு வழங்கி உள்ளது.இவற்றை ஒப்பிடும்போது தமிழ்நாடு அரசு கட்டட தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள நிவாரணத் தொகை மிக, மிக குறைவானது. எனவே தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தித் தர அரசுக்கு உத்தரவிட வேண்டும். தங்கள் பதிவை புதுப்பிக்காத தொழிலாளர்களுக்கும் இந்த தொகையை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாரயணன், ராஜ மாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி வாதாடினார். கட்டட நலவாரியத்தில் உள்ள 30 லட்சம் உறுப்பினர்களுக்கும் நலத்திட்டங்களை அரசு கொடுக்க வேண்டும் மேலும் டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களில் கட்டட தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக நிவாரணம் வழங்க பட்டுள்ளது அதுபோன்று தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

இதனை பதிவு செய்த நீதிபதிகள் கட்டட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட மொத்த உறுப்பினர்கள் எத்தனை பேர் என்றும் அதில் பதிவு புதுப்பிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் புதுப்பிக்க தவறியவர்கள் எத்தனை பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் என்பது குறித்தும், இதுவரை வழங்கப்பட்டுள்ள நிவாரணம் என்ன என்பது குறித்து விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதேபோல் கட்டட தொழிலாளர் நல வாரியம் சார்பாக கட்டட தொழிலாளர்களுக்கு ஏதேனும் நலதிட்டங்கள் வழங்குவது குறித்த பரிந்துரைகள் இருந்தால் அதனையும் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.