இந்தியாவில் கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழக்கும் சம்வங்களும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் மருத்துவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தீர்தங்கர் மஹாவீர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாள்களாக அவரது உடல்நலம் மோசமடைந்த நிலையில் அவர் வென்ட்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனை மொராதாபாத் தலைமை மருத்துவர் எம்.சி. கார்க் உறுதிப்படுத்தினார்.
மத்திய சுகாதார அமைச்சகம் சற்றுமுன் வெளியிட்ட தகவலின்படி உத்தரப் பிரதேசத்தில் 1084 கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 108 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேசமயம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக நேற்று சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நரம்பியல் மருத்துவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்களுக்கே பாதுகாப்பில்லை, எப்படிச் சிகிச்சை அளிக்க முடியும்' - உ.பி. மருத்துவர்கள் வேதனை!