புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அம்மாநிலத்தின் கரோனா நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், "புதுச்சேரியில் இன்று (ஆக. 28) 604 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 24ஆக அதிகரித்துள்ளது. ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி வந்துள்ள மத்திய மருத்துவக் குழு ஆய்விற்குப் பிறகு சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி கிட்டத்தட்ட இன்னும் 20 நாள்களில் கரோனா அதிகரிப்பது கட்டுப்படுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கிறோம். கரோனா தடுப்பு பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட 458 பேர் நாளை பணியில் நியமிக்கப்படவுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு!