புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த ஐந்தாம் தேதி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற மாணவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, கல்வியமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து ஐந்தாம் தேதி பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 10) காரைக்காலில் உள்ள 20க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு கரோனா பரிசோதனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முடிவு நாளை தெரிவிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பாராட்டு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் கமலக்கண்ணனுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.